யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?
யெகோவாவின் சாட்சிகள் மனதார கொடுக்கும் நன்கொடைகள் மூலமாகவே எங்கள் பிரசங்க வேலைக்குப் பண உதவி கிடைக்கிறது. a எங்களது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். மற்ற வழிகளில் எப்படியெல்லாம் நன்கொடை கொடுக்கலாம் என்பதைப் பற்றி எங்கள் வெப்சைட்டில் நன்கொடைகள் என்ற பக்கத்தில் இருக்கிறது. உலகளாவிய வேலைகளுக்கு அல்லது சபை செலவுகளுக்கு அல்லது இரண்டிற்கும் நன்கொடை கொடுப்பதற்கு வசதியாக தனித் தனி ஆப்ஷன்கள் இருக்கின்றன.
யெகோவாவின் சாட்சிகள் தசமபாகமோ சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையையோ செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. (2 கொரிந்தியர் 9:7) எங்களது கூட்டங்களில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. உண்டியலில் காசு வசூலிப்பதும் இல்லை. ஞானஸ்நானம், சவஅடக்கம், கல்யாணம் போன்ற விஷயங்களுக்கு எங்களுடைய ஊழியர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. அங்காடிகள், சூதாட்ட விளையாட்டுகள், திருவிழாக்கள், குலுக்கு சீட்டு விற்பனைகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியும் நாங்கள் பணம் வசூலிப்பதில்லை. நன்கொடைகளை கொடுக்க நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதும் இல்லை. நன்கொடை கொடுப்பவரைப் பற்றிய தவவல்களை நாங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்வது இல்லை. (மத்தேயு 6:2-4) எங்கள் வெப்சைட்டிலும் பிரசுரங்களிலும் பணத்தைத் திரட்டுவதற்கான விளம்பரங்கள் எதுவும் இல்லை.
ஒவ்வொரு சபையும் மாதம் மாதம் தங்கள் சபையின் கணக்கு அறிக்கையை கூட்டங்களில் தெரிவிப்பார்கள். ஒவ்வொரு சபையின் கணக்குகளும் தவறாமல் தணிக்கை செய்யப்படுகின்றன. இதனால், நன்கொடைகள் சரியாக பயன்படுத்துப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.—2 கொரிந்தியர் 8:20, 21.
நன்கொடை கொடுப்பதற்கான வழிகள்
நன்கொடை பெட்டிகள்: ராஜ்ய மன்றங்களில், மாநாட்டு மன்றங்களில் அல்லது கூட்டங்கள் நடக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் பணமோ காசோலைகளையோ நீங்கள் போடலாம்.
ஆன்லைன் நன்கொடைகள்:, “யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்கொடை கொடுங்கள்” என்ற பக்கத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கி பணம் பரிமாற்றம் போன்ற எலக்ட்ரானிக் முறைகளின் மூலம் நிறைய நாடுகளில் இருப்பவர்களால் நன்கொடை கொடுக்க முடிகிறது. b இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்டுத்தி சாட்சிகளில் சிலர் தவறாமல் நன்கொடை கொடுக்கிறார்கள். அதற்காக, ஒவ்வொரு மாதமும் ‘ஏதாவது சேமித்து வைக்கிறார்கள்.’—1 கொரிந்தியர் 16:2.
திட்டமிட்ட நன்கொடைகள்: சில நன்கொடைகளைக் கொடுப்பதற்கு, முன்கூட்டியே திட்டமிட வேண்டும் அல்லது சட்டப்பூர்வ ஆலோசனை கேட்க வேண்டும். சிலசமயங்களில், இந்த இரண்டையுமே செய்ய வேண்டியிருக்கலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிடுவதால் உங்கள் நாட்டில் இருக்கும் வரி சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கலாம். உயிரோடு இருக்கும்போது அல்லது இறந்ததற்கு பிறகு கொடுக்க நினைக்கும் திட்டமிட்ட நன்கொடைகளைப் பற்றி தெரிந்துகொண்டதால் நிறைய பேர் நன்மை அடைந்திருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்கொடைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்:
வங்கி கணக்குகள்
காப்பீடு திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டம்
நிலம், வீடு
பங்குகள் மற்றும் பத்திரங்கள்
உயில்கள் மற்றும் டிரஸ்ட்டுகள்
நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள நன்கொடை கொடுக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்கொடை கொடுங்கள்” என்ற பக்கத்தைப் பாருங்கள்.
a சாட்சிகளாக இல்லாத சிலர்கூட எங்கள் வேலைகளுக்காக மனதார நன்கொடைகள் கொடுக்கிறார்கள்.
b ஆன்லைனில் நன்கொடைகள் கொடுப்பது எப்படி? என்ற வீடியோவைப் பாருங்கள்