காவற்கோபுரம் எண் 1 2022 | வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள்
வெறுப்பு! வெறுப்பு!! வெறுப்பு!!! திரும்பிய பக்கமெல்லாம் இதுதான் இருக்கிறது. பாகுபாடு பார்ப்பது, வன்முறையில் இறங்குவது, வார்த்தைகளால் மனதை குத்திக் கிழிப்பது, கொலை செய்வது, இந்த மாதிரியான கொடூர வழிகளில் மக்கள் வெறுப்பைக் காட்டுகிறார்கள். வெறுப்பே இல்லாத காலம் என்றைக்காவது வருமா? வெறுப்பு என்ற சங்கிலி தொடரை அறுத்து எறிய பைபிள் எப்படி உதவும் என்பதைப் பற்றி இந்த பத்திரிகையில் பார்ப்போம். வெறுப்பே இல்லாத காலம் கண்டிப்பாக வரும் என்று கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். அதைப் பற்றியும் இந்தப் பத்திரிகையில் தெரிந்துகொள்வீர்கள்!
வெறுப்பை வெல்ல முடியும்!
வெறுப்பு சங்கிலி என்றால் என்ன? பெரும்பாலும் வெறுப்பு எப்படிக் காட்டப்படுகிறது?
உலகம் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது?
வெறுப்பின் ஆணிவேர் என்ன? மக்கள் ஏன் மற்றவர்களை வெறுக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் பதில் சொல்கிறது.
வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
நல்லபடியாக மாறுவதற்கு பைபிளின் போதனைகள் நிறைய பேருக்கு உதவியாக இருந்திருக்கிறது.
வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
1 | பாரபட்சம் பார்க்காதீர்கள்
மற்றவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களை எடுத்துப்போடுங்கள். பாரபட்சம் பார்க்காதீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் கடவுளைப் போலவே நடந்துகொள்ளுங்கள்.
வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
2 | பழிவாங்க துடிக்காதீர்கள்
எல்லாவற்றையும் கடவுள் சரி செய்வார் என்று நம்பி பழிவாங்கும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்.
வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்
பைபிளின் உதவியோடு வெறுப்பை மனதிலிருந்து தூக்கி எறியுங்கள்.
வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
4 | கடவுளின் உதவியோடு வெறுப்பை வெல்லுங்கள்
வெறுப்பை வெல்ல உதவும் குணங்களை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி உங்களுக்கு உதவி செய்யும்.
வெறுப்பு—தடம் தெரியாமல் போகும் காலம்!
வெறுப்பே இல்லாத காலம் என்றைக்காவது வருமா? அப்படியென்றால், அதை யார் கொண்டு வருவார்?
வெறுப்பால் வெறுப்பானவர்கள்—உலகெங்கும்!
வெறுப்பு சங்கிலியை உடைப்பது சாத்தியமா? உலகம் முழுவதும் நிறைய பேர் அதை ஏற்கெனவே உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.