Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமக்கு சரியென படுவதை செய்வது எப்போதுமே சரியாக இருக்குமா?

மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள்?

மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள்?

சில விஷயங்களை செய்வது சரி என்றும், சில விஷயங்களை செய்வது தவறு என்றும் பொதுவாகவே மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். உதாரணத்துக்கு கொலை, கற்பழிப்பு, குழந்தை பாலியல் வன்கொடுமை இதையெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்கள். அதேசமயத்தில் நேர்மையாக நடப்பதை, அனுதாபம் காட்டுவதை, இரக்கத்தோடு நடப்பதையெல்லாம் மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் சில விஷயங்களில், உதாரணத்துக்கு, யாருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்... உண்மையை சொல்வதா வேண்டாமா... குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்... இதுபோன்ற விஷயங்களில் சரி-தவறு என்று எதுவும் இல்லை, எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் பொதுவாக அவர்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை வைத்து முடிவு எடுக்கிறார்கள். இல்லையென்றால், அவர்களை சுற்றி இருக்கும் மக்கள் எதை சரி என்று சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது சரியாக இருக்குமா?

நமக்கு சரியென படுவது

எது சரி, எது தவறு என்று நமக்குள் ஒரு உணர்வு இருக்கிறது. அதுதான் நம்முடைய மனசாட்சி. பெரும்பாலும் மனசாட்சி சொல்கிறபடிதான் நாம் செய்வோம். (ரோமர் 2:14, 15) ஏதாவது ஒரு விஷயம் தவறாக நடப்பதைப் பார்த்தால் அது சரியில்லை என்று பிள்ளைகளால்கூட புரிந்துகொள்ள முடியும். தவறு செய்துவிட்டால் அவர்களுடைய மனசாட்சிகூட உறுத்தும். பொதுவாகவே நம் குடும்பத்தில் இருப்பவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், சமுதாயம், மதம், கலாச்சாரம், இதில் இருப்பவர்களிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோமோ அதற்கேற்ற மாதிரி நம் மனசாட்சி வடிவமைக்கப்படுகிறது. அதை வைத்துதான் நாம் எடுத்த முடிவு சரியா, தவறா என்று நம்முடைய மனசாட்சி சொல்லும்.

எது சரி, எது தவறு என்று நமக்குள் இருக்கும் உணர்வு மற்றவர்களிடம் அனுதாபத்தோடும், நன்றியோடும், நேர்மையோடும், பாசத்தோடும் நடந்துகொள்ள உதவும். அவர்களைக் கஷ்டப்படுத்துவதுபோல் எதையும் செய்யாமல் இருக்கவும் உதவும். அதுமட்டுமல்ல, நமக்கு அவமானத்தையோ, குற்றவுணர்ச்சியையோ ஏற்படுத்துகிற எதையுமே செய்துவிடாமல் இருக்கவும் அது நமக்கு உதவும்.

நமக்கு சரியென படுவது எப்போதுமே சரியாக இருக்குமா? கேரிக் என்ற இளைஞர், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றி அவரே இப்படி சொல்கிறார்: “என் இஷ்டப்படி நான் வாழ ஆரம்பித்தேன். எனக்கு சரியென பட்டதையெல்லாம் நான் செய்தேன்.” இப்படி வாழ்ந்ததால் அவர் சந்தோஷமாக இருந்தாரா? அவர் சொல்கிறார்: “என் வாழ்க்கை நாசமாகத்தான் போனது. ஒழுக்கக்கேடாக வாழ ஆரம்பித்தேன், வெறித்தனமாகக் குடித்தேன், போதைப் பொருளைப் பயன்படுத்தினேன், அடிதடியிலும் இறங்கினேன்.”

மற்றவர்களுக்கு சரியென படுவது

நமக்கு சரியென படுவதை வைத்து நாம் முடிவுகள் எடுத்தாலும் நிறைய சமயங்களில் மற்றவர்கள் செய்வதைப் பார்த்தும் நாம் முடிவுகள் எடுக்கிறோம். அப்படி செய்யும்போது அவர்களுக்கு இருக்கும் அறிவு... அனுபவம்... ஆகியவற்றிலிருந்து நமக்கும் நன்மை கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள், நம்முடைய நண்பர்கள், நம்மை சுற்றி இருப்பவர்களுடைய மதிப்பு மரியாதையையும் சம்பாதிக்க முடியும்.

மற்றவர்களுக்கு சரியென படுவது எப்போதுமே சரியாக இருக்குமா? ப்ரிஸில்லா ஒரு இளம் பெண்ணாக இருந்தபோது, அவளுடைய நண்பர்கள் என்ன செய்தார்களோ அதையே அவளும் செய்தாள். கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொண்டாள். அவளுடைய நண்பர்களைப் பொறுத்தவரை ப்ரிஸில்லா செய்தது சரிதான். ஆனால், ப்ரிஸில்லாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்ததா? அவள் இப்படி சொல்கிறாள்: “என்னை சுற்றி இருந்தவர்கள் செய்ததைத்தான் நானும் செய்தேன். ஆனால், அது எனக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. நான் ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகொண்டேன், தேவையில்லாத பிரச்சினையிலும் மாட்டிக்கொண்டேன்.”

எப்படித்தான் முடிவு எடுப்பது?

பொதுவாகவே நமக்கு சரியென படுவதை வைத்து அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு சரியென படுவதை வைத்து நாம் முடிவுகளை எடுக்கிறோம். ஆனால், எப்போதுமே அது சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது. அது நமக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம். ஏனென்றால், நாம் எடுத்திருக்கும் முடிவு நம்மை எங்கு கொண்டுபோய் விடும் என்று நமக்குத் தெரியாது. (நீதிமொழிகள் 14:12) ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று நினைத்த பழக்கவழக்கங்களை மக்கள் இன்று ஏற்றுக்கொள்கிறார்கள். முன்பு சரியென சொன்ன சில விஷயங்களை இப்போது தவறென சொல்கிறார்கள். அதனால், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் சரியென நினைக்கும் ஒரு விஷயம் நமக்கு நல்லதாகத்தான் இருக்கும் என்றோ அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் வராது என்றோ நம்மால் சொல்ல முடியாது.

மற்றவர்களுக்கு சரியென படும் விஷயத்தை செய்வது எப்போதுமே சரியாக இருக்குமா?

எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்ள நமக்கு ஏதாவது நல்ல வழிகாட்டி இருக்கிறதா? எப்போதுமே சந்தோஷத்தைக் கொடுக்கிற மாதிரி நல்ல முடிவுகளை எடுக்க அது நமக்கு உதவுமா?

சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நாம் யாராக இருந்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, எப்போதுமே நல்ல முடிவுகளை எடுக்க நமக்கு உதவும் ஒரு அருமையான வழிகாட்டி இருக்கிறது. அந்த வழிகாட்டியைப் பற்றித்தான் அடுத்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.