Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

தென்கிழக்கு ஆசியா

1997 முதல் 2011 வரை கிரேட்டர் மேகாங் பகுதியில் (கம்போடியா, லாவோஸ், மயன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலுள்ள யுனான் மாகாணம் ஆகிய பகுதிகளில்) புதுவகையான தாவரங்களும் மிருகங்களும் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக வனவிலங்கு நிதி சொல்கிறது. அதில் ஒன்றுதான் சிவப்பு நிற கண்களையுடைய விரியன் பாம்பு. 2011-ல் மட்டுமே 82 தாவரங்கள், 21 ஊர்வன உயிரினங்கள், 13 மீன்கள், 5 நில நீர் வாழ் உயிரினங்கள், 5 பாலூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா

தி மாஸ்கோ டைம்ஸ் அறிக்கையின்படி “முழு ஐரோப்பாவிலும்” ஆள் கடத்தல் மிகப் பெரிய பிரச்சினையாகி வருகிறது. இவர்கள் பாலியல் கொடுமை செய்யப்படுகிறார்கள், கொத்தடிமைகளாக விற்கப்படுகிறார்கள், இவர்களுடைய உடல் உறுப்புகளும் திருடப்படுகின்றன. மக்களின் வறுமை, வேற்றுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கடத்தல்காரர்கள் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நியுஜிலாந்து

அதிகமாக டிவி பார்க்கும் இளம் பிள்ளைகள், “முரட்டுத்தனமாக இருப்பார்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள்” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பிள்ளைகள், ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் மட்டும், அதுவும் நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். (g14-E 05)

அலாஸ்கா

அலாஸ்காவில், பழங்குடியினர் வாழும் கிராமங்கள் பெரும்பாலும் கடற்கரை அல்லது ஆற்றங்கரை ஓரமாக இருக்கின்றன. அதில், 86 சதவீத கிராமங்கள் வெள்ளத்தாலும் மண் அரிப்பாலும் பாதிக்கப்படுகின்றன. பனிக்காலத்தில் கடற்கரை ஓரமாக உறைந்திருக்கும் பனிக்கட்டிகள், புயலுக்குத் தடுப்புச் சுவராக இருந்தன. ஆனால், இப்போது அதிகரித்து வரும் வெப்பத்தால், பனிக்கட்டிகள் உருவாக தாமதமாகிறது. அதனால், இந்த இடங்களை புயல் அதிகமாகத் தாக்குகிறது.

உலகம்

சுற்றுச்சூழல் மாசுபடாமல் மின் சக்தியை உற்பத்தி செய்ய (காற்றிலிருந்தும் சூரியனிலிருந்தும் மின் சக்தியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்) அதிக பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனாலும் “சராசரியாக, உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின் சக்தி, 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் மாசுபட்டு இருக்கிறது” என்பதாக சர்வதேச சக்தி நிறுவனத்தின் (International Energy Agency) நிர்வாகத் தலைவர் மரியா வான் டெர் ஹூவென் சொல்கிறார்