Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஞானம் உங்களை அழைக்கிறது—அது உங்களுக்குக் கேட்கிறதா?

ஞானம் உங்களை அழைக்கிறது—அது உங்களுக்குக் கேட்கிறதா?

“ஞானமும், அறிவும் கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன. அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது . . . திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.” நீதிமொழிகள் 8:1-3, ஈஸி டு ரீட் வர்ஷன்.

ஞானம் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நாம் ஞானமாக நடக்காவிட்டால் தவறான முடிவுகளையே எடுப்போம். ஆனால், ஞானம் எப்படி கிடைக்கும்? நம்மைப் படைத்த கடவுளிடம்தான் ஞானம் இருக்கிறது என்று நீதிமொழிகள் புத்தகத்தை எழுதியவர் சொன்னார். கடவுளுக்கு இருக்கும் ஞானம் வேறு யாருக்குமே இல்லை. அந்த ஞானத்தை பைபிள் மூலமாக கடவுள் நம் எல்லோருக்கும் கொடுக்கிறார். எப்படி என்று பாருங்கள்...

  • த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது, “சரித்திரத்திலேயே பைபிள்தான் அதிகமாக விநியோகிக்கப்படும் புத்தகம். எந்தவொரு புத்தகத்தையும்விட பைபிள்தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒரே மொழியில் வித்தியாசமான மொழிபெயர்ப்புகளும் (Versions) இருக்கின்றன.” முழுமையாகவோ பகுதியாகவோ பைபிள் 2,600 மொழிகளில் கிடைக்கிறது. உலகத்திலுள்ள 90 சதவீத மக்களுக்கு அது கிடைக்கிறது.

  • அதேசமயம் ஞானம் நம்மை ‘அழைக்கிறது.’ எப்படி? மத்தேயு 24:14 சொல்கிறது, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு [இந்த பொல்லாத உலகத்திற்கு] முடிவு வரும்.” இந்த ‘நற்செய்தியை’ எல்லோருக்கும் சொல்வதன் மூலம் ஞானம் உங்களை ‘அழைக்கிறது.’

இன்று ஜனங்கள் படும் கஷ்டங்களைக் கடவுள் எப்படி ஞானமாகச் சரிசெய்யப் போகிறார் என்று அது சொல்கிறது. கடவுள் தம்முடைய அரசாங்கத்தின் மூலமாக முழு பூமியையும் அவரே ஆட்சி செய்ய போகிறார். (தானியேல் 2:44; 7:13, 14) அதனால்தான் இயேசு இப்படி ஜெபம் செய்தார்: “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.”—மத்தேயு 6:9, 10.

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி 239 நாடுகளில் சொல்லி வருகிறார்கள்! அந்த வேலையை அவர்கள் பாக்கியமாக நினைக்கிறார்கள். ஞானம்... தெய்வீக ஞானம்... இன்று எல்லோரையும் ‘அழைக்கிறது.’ “கதவுகளின் வெளியே” நின்று அழைக்கிறது. அது உங்களுக்குக் கேட்கிறதா? ▪ (g14-E 05)