Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் இருக்கிறாரா? இதுக்கு பதில் தெரிஞ்சுக்கிறதனால என்ன நன்மை?

கடவுள் இருக்கிறாரா? இதுக்கு பதில் தெரிஞ்சுக்கிறதனால என்ன நன்மை?

“கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது”னு சிலர் நினைக்கிறாங்க. “கடவுள் இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி, எனக்கு அதை பத்தி கவலையில்லை”னு சிலர் சொல்றாங்க. பிரான்ஸ் நாட்டுல வளர்ந்த எர்வா இப்படி சொல்றார்: “கடவுள் இருக்கார்னும் நான் சொல்லலை, இல்லைனும் சொல்லலை. என்னை பொறுத்தவரை, நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்கு, கடவுள் வந்து ஒண்ணும் செய்யப்போறதில்லை.”

அமெரிக்காவுல இருக்குற ஜான் சொல்றதை கேளுங்க: “கடவுள் நம்பிக்கை இல்லாத குடும்பத்திலதான் நான் வளர்ந்தேன். கடவுள் இருக்காரா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா, சில சமயத்தில இதை பத்தி யோசிச்சு பார்த்திருக்கேன்.”

கடவுள் இருக்கிறாரா இல்லையானு நீங்க என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? அப்படி இருக்கிறார்னா அவர் எதுக்காக நம்மள படைச்சிருப்பார்னு நினைக்கிறீங்க? உயிர் வாழ்றதுக்கு ஏத்த மாதிரி இந்த பூமி இருக்குனு அறிவியல் சொல்லுது, உயிரில்லாத பொருள்ல இருந்து உயிர் உருவாக முடியாதுனு விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. இதையெல்லாம் நீங்ககூட கேள்விப்பட்டிருப்பீங்க. கடவுள்னு ஒருத்தர் இல்லைனா, இந்த பூமியும் அதுல இருக்கிற எல்லா உயிர்களும் எப்படி வந்திருக்கும்?— “ஆதாரங்களை தேடிப்பாருங்க” என்ற பெட்டியை பாருங்க.

அறிவியல் சொல்ற விஷயங்களை பத்தி பார்த்தோம். இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அப்படி யோசிச்சு பார்த்தா, கடவுள் இருக்கிறாரா இல்லையானு நீங்க தெரிஞ்சுக்குவீங்க. கடவுள் இருக்கிறார்னு நம்புறதுக்கும், அவர் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்கிறதுக்கும் தேவையான தகவல்கள் உங்களுக்கு கிடைச்சா அது புதையல் கிடைச்சதுக்கு சமம். அவ்வளவு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்! அதுல நாலு நன்மைகளை பத்தி இப்ப பார்க்கலாம்.

1. வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிஞ்சுக்கலாம்

நம்ம வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா? அப்படி இருந்தா, அதை பத்தி தெரிஞ்சுக்கணும்னு நாம ஆசைப்படுவோம். அதை தெரிஞ்சுகிட்டா, இப்போ வாழ்க்கையில நாம என்ன செஞ்சுட்டு இருக்கிறோம், இனிமேல் என்ன செய்யணும்னு யோசிப்போம். கடவுள்னு ஒருத்தர் இருந்து, அதை பத்தி உங்களுக்குத் தெரியலைனா, இந்த உலகத்திலயே முக்கியமான ஒரு உண்மை தெரியாம வாழ்ந்திட்டு இருக்கிறமாதிரி ஆயிடும்.

எல்லாத்தையும் கடவுள்தான் படைச்சார்னு பைபிள் சொல்லுது. (வெளிப்படுத்துதல் 4:11) இதை தெரிஞ்சுக்கும்போது நம்ம வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்குது. எப்படினு யோசிக்கிறீங்களா? அதை பைபிள்ல இருந்தே இப்போ பார்க்கலாம்.

கடவுளோட படைப்புலேயே அற்புதமான படைப்புனா அது மனுஷங்கதான்! அவருக்கு இருக்கிற அதே குணங்களோட நம்மள படைச்சிருக்கார்னு பைபிள் சொல்லுது. (ஆதியாகமம் 1:27) அது மட்டுமில்ல, நாம கடவுளோட நண்பர்களா இருக்க முடியும்னுகூட பைபிள் சொல்லுது. (யாக்கோபு 2:23) நம்மள படைச்ச கடவுளுக்கு நண்பரா இருக்கிறதைவிட, வேற எதுவுமே நம்ம வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்க முடியாது.

கடவுளுக்கு நண்பரா இருக்கிறதால நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நம்ம மனசுல இருக்கிறதை எல்லாம் தாராளமா கடவுள்கிட்ட சொல்லலாம். நாம சொல்றதை காதுகொடுத்து கேட்டு, கண்டிப்பா உதவி செய்றதா அவரே சொல்லியிருக்கார். (சங்கீதம் 91:15) அதுமட்டுமில்ல, எந்த விஷயமா இருந்தாலும், அதை பத்தி அவர் என்ன நினைக்கிறார்னும் நாம தெரிஞ்சுக்க முடியும். அப்படி தெரிஞ்சுக்கும்போது நம்ம மனசுல இருக்கிற நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

கடவுள்னு ஒருத்தர் இருந்து, அதை பத்தி உங்களுக்குத் தெரியலைனா, இந்த உலகத்திலயே முக்கியமான ஒரு உண்மை தெரியாம வாழ்ந்திட்டு இருக்கிறமாதிரி ஆயிடும்

2. மன நிம்மதி கிடைக்கும்

மக்கள் படுற கஷ்டத்தை பார்த்து நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாம போயிடுச்சு. ‘கடவுளுக்கு சக்தி இருக்கிறது உண்மையா இருந்தா, அவர் ஏன் இந்த கஷ்டத்தை எல்லாம் இன்னும் தீர்க்காம இருக்கார்?’னு அவங்க கேட்குறாங்க.

இதை பத்தி பைபிள் என்ன சொல்லுது? மனுஷங்க இப்படி கஷ்டப்படணும்னு கடவுள் நினைக்கவே இல்லை. கடவுள் முதல்முதல்ல படைச்ச ஆணும் பெண்ணும் எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருந்தாங்க. கொஞ்ச காலம் வாழ்ந்துட்டு அப்புறம் செத்துப் போறதுக்காக கடவுள் அவங்கள படைக்கல, என்னைக்கும் வாழ்றதுக்காகத்தான் படைச்சார். (ஆதியாகமம் 2:7-9, 15-17) இது ஒண்ணும் கட்டுக்கதை இல்லை, இதை நீங்க தாராளமா நம்பலாம். ஏன்னா, கடவுளுக்கு நிறைய சக்தி இருக்கு, அவர் மனுஷங்க மேல ரொம்ப அன்பு வைச்சிருக்கார். இப்படிப்பட்ட கடவுள் மனுஷங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கணும்னுதானே நினைப்பார்!

அப்புறம் ஏன் மனுஷங்களுக்கு இந்த மோசமான நிலைமை வந்துச்சு? கடவுள் முதல்முதல்ல ஆணையும் பெண்ணையும் படைச்சப்போ, அவங்க நல்லா இருக்கணும்னா என்ன செய்யணும்னு அவங்ககிட்ட சொல்லியிருந்தார். அதேசமயத்தில, அவங்கள மெஷின் மாதிரி அவர் படைக்கல; அவர் சொல்றதை கேட்டே ஆகணும்னு கட்டாயப்படுத்தல. எதை செய்யணும், எதை செய்யக்கூடாதுனு முடிவெடுக்கிற உரிமையை அவங்களுக்கு கொடுத்திருந்தார். ஆனா, அவங்க ரெண்டு பேரும் கடவுள் பேச்சை கேட்காம தப்பு செஞ்சாங்க. யாரை பத்தியும் கவலைப்படாம சுயநலமா நடந்துகிட்டாங்க. (ஆதியாகமம் 3:1-6, 22-24) அவங்களோட வாரிசுகளா இருக்கிறதனாலதான் நாம எல்லாருமே கஷ்டப்படுறோம்.

ஆனா, மனுஷங்களை படைக்குறப்போ அவங்க கஷ்டப்படணும்னு அவர் படைக்கல. இதை தெரிஞ்சுகிட்டது நம்ம மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இருந்தாலும், நம்ம கஷ்டமெல்லாம் தீராதானு நினைச்சு நாம எல்லாருமே ஏங்குறோம். நம்ம ஏக்கம் என்னைக்கு தீரும்?

3. நம்பிக்கை கிடைக்கும்

முதல் மனுஷன் தப்பு செஞ்ச உடனே, கடவுள் ஒரு வாக்கு கொடுத்தார். அவர் எதுக்காக இந்த பூமியை படைச்சாரோ அதை கண்டிப்பா நிறைவேத்த போறதா சொன்னார். அவருக்கு எல்லா சக்தியும் இருக்கு, அதனால அவர் சொன்னதை கண்டிப்பா செய்வார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (ஏசாயா 55:11) முதல் மனுஷன் தப்பு செஞ்சதனால வந்த கஷ்டத்தை எல்லாம் அவர் சரிசெய்ய போறார். அவர் நினைச்ச மாதிரியே இந்த பூமி ஒரு பூந்தோட்டமா மாறும், மனுஷங்க அதுல சந்தோஷமா வாழ்வாங்க.

சரி, அந்த பூஞ்சோலை பூமியில நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கப்போகுது? நிறைய நன்மைகள் கிடைக்கும்னு கடவுள் சொல்லியிருக்கிறார். இரண்டு விஷயங்களை மட்டும் இப்போ பார்க்கலாம்.

  • உலகம் முழுசும் சமாதானம் இருக்கும், அநியாயம் அக்கிரமம் எதுவுமே இருக்காது. “இன்னும் கொஞ்ச காலம்தான், பிறகு கெட்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினால்கூட அவர்களைப் பார்க்க முடியாது. தாழ்மையுள்ள ஜனங்கள் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்வார்கள். உலகம் முழுவதும் சமாதானம் இருப்பதால் அவர்கள் ரொம்ப சந்தோஷமாக வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:10, 11, NW.

  • வியாதியும் மரணமும் இருக்காது. “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.”—ஏசாயா 25:8.

பைபிள்ல கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நம்பலாமா? கண்டிப்பா நம்பலாம். ஏன்னா, கடவுள் சொன்ன நிறைய விஷயங்கள் ஏற்கெனவே நடந்திருக்கு. எதிர்காலத்தில நல்ல வாழ்க்கை கிடைக்கப்போறது சந்தோஷமான விஷயம்தான். ஆனா, இப்போ நமக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கே! அதை சமாளிக்கிறதுக்கு கடவுள் ஏதாவது உதவி செய்வாரா?

4. பிரச்சினைகளை சமாளிக்க, சரியா முடிவு எடுக்க உதவி கிடைக்கும்

நமக்கு வர்ற பிரச்சினைகளை சமாளிக்கிறதுக்கும் சரியான முடிவு எடுக்குறதுக்கும் கடவுள் நமக்கு உதவி செய்றார். நாம தினமும் நிறைய முடிவுகளை எடுக்கிறோம். சில சமயத்தில, சின்ன சின்ன முடிவுகளை எடுக்கிறோம். சில சமயத்தில, ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுக்கிறோம். முக்கியமான முடிவுகளை சரியா எடுக்கலனா, வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். சரியா முடிவு எடுக்கிறதுக்கு கடவுளால மட்டும்தான் நமக்கு வழிகாட்ட முடியும், வேற யாராலயும் முடியாது. ஏன்னா, நடந்து முடிஞ்சது... நடக்கப்போறது... எல்லாமே அவருக்கு மட்டும்தான் தெரியும். அதுமட்டுமில்ல, அவர்தான் நம்மள படைச்சவர். அதனால, நமக்கு எது நல்லதுனு அவருக்குத்தான் நல்லா தெரியும்.

கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற ஆலோசனைகள் எல்லாமே பைபிள்ல இருக்கு. அதை எழுதுறதுக்கு அவர் மனுஷங்களை பயன்படுத்தினார். கடவுள் இதை பத்தி சொல்லும்போது, “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே”னு சொல்லியிருக்கார்.—ஏசாயா 48:17, 18.

கடவுளுக்கு எல்லா சக்தியும் இருக்கு. நமக்காக அந்த சக்தியை பயன்படுத்த அவர் தயாரா இருக்கிறார். அவர் ஒரு அன்பான அப்பா மாதிரி! நமக்கு உதவி செய்ய ரொம்ப ஆசைப்படுறார். ‘பரலோகத்திலுள்ள உங்கள் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை கொடுப்பார்’னு பைபிள் சொல்லுது. (லூக்கா 11:13) இந்த சக்தி, சரியான முடிவு எடுக்க நமக்கு உதவி செய்யும், சோர்ந்துபோகும்போது நமக்கு பலத்தை கொடுக்கும்.

கடவுளோட உதவி வேணும்னா நாம என்ன செய்யணும்? “கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்”னு பைபிள் சொல்லுது. (எபிரெயர் 11:6) கடவுள் இருக்கிறதை நம்பணும்னா, அதுக்கு என்னென்ன அத்தாட்சிகள் இருக்குனு நீங்க தேடி பார்க்கணும்.

நீங்க தேடி பார்ப்பீங்களா?

கடவுளை பத்தி தெரிஞ்சுக்கணும்னா அதுக்கு கொஞ்ச நேரத்தை ஒதுக்கணும். அப்படி செஞ்சா உங்களுக்கு கண்டிப்பா பலன் கிடைக்கும். உதாரணமா, சீனாவை சேர்ந்த சியூஜின் சியுவோட அனுபவத்தை பார்க்கலாம். இப்போ அவர் அமெரிக்காவுல இருக்கிறார். அவர் இப்படி சொல்றார்: “குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு நான் நம்பிட்டிருந்தேன். இருந்தாலும், பைபிள்ல என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். அதனால, யெகோவாவின் சாட்சிகளோட சேர்ந்து பைபிளை படிக்க ஆரம்பிச்சேன். காலேஜ்ல கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தப்போ ரொம்ப பிஸியா இருந்தேன். அதனால, எனக்கு பைபிள் படிக்கிறதுக்கு நேரம் இல்லாம போச்சு. பைபிளை படிக்காதனால எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்துச்சு. என்னைக்கு மறுபடியும் பைபிள் படிக்க ஆரம்பிச்சனோ அன்னைக்குதான் தொலைஞ்சு போன சந்தோஷம் திரும்பவும் கிடைச்சுது.”

நம்ம எல்லாரையும் படைச்ச யெகோவாவை பத்தி தெரிஞ்சுக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்களா? கொஞ்ச நேரம் ஒதுக்குனா அவரை பத்தி நிறைய தெரிஞ்சுக்கலாம். ▪ (g15-E 03)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 49 இந்த புத்தகம் தமிழ்ல இல்லை.