பைபிள் தரும் பதில்கள்
கடவுள்மேல அன்பு காட்ட பிள்ளைங்களுக்கு எப்படி சொல்லித்தரலாம்?
முதல்ல, கடவுள் இருக்கார்னு பிள்ளைங்க நம்பனும். நம்ம மேல அவருக்கு அன்பு இருக்குனு புரிஞ்சிக்கனும். (1 யோவான் 4:8) அவரை பத்தி தெரிஞ்சிக்கனும். ‘கடவுள் ஏன் நம்மல படைச்சார்? நாம ஏன் கஷ்டப்படுறோம்? கஷ்டம் இல்லாத வாழ்க்கை வருமா?’ இதையெல்லாம் பிள்ளைங்களுக்கு சொல்லிக்கொடுங்க. அப்பதான் கடவுள்மேல அவங்க அன்பு காட்டுவாங்க.—பிலிப்பியர் 1:9-ஐ படிங்க.
நீங்க கடவுள்மேல அன்பு காட்டுங்க. உங்கள பார்த்து பிள்ளைங்களும் கடவுள்மேல அன்பு காட்டுவாங்க.—உபாகமம் 6:5-7; நீதிமொழிகள் 22:6-ஐ படிங்க.
பிள்ளைங்க புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்லித்தரலாம்?
பிள்ளைங்களுக்கு பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுங்க. ஏன்னா, அது கடவுள் தந்த புத்தகம். அதிலிருந்து சொல்லிக்கொடுத்தா, கடவுளே அவங்ககிட்ட பேசுற மாதிரி இருக்கும். (எபிரெயர் 4:12) இயேசுவும் வசனங்கள்ல இருந்து மக்களுக்கு விளக்கி சொன்னார். அவங்க புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லிக்கொடுத்தார். அதுக்கு நிறைய கேள்விகள கேட்டார். அவங்க சொல்றதையும் கவனமா கேட்டார். இயேசு மாதிரியே சொல்லிக்கொடுத்தா, பிள்ளைங்க நல்லா புரிஞ்சிப்பாங்க.—லூக்கா 24:15-19, 27, 32-ஐ படிங்க.
மக்கள கடவுள் எப்படி கவனிச்சிக்கிட்டார்னு பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுங்க. அப்போ கடவுள்மேல இன்னும் அன்பு காட்டுவாங்க. www.mt1130.com வெப்சைட்ல, பிள்ளைங்களுக்கு கடவுள பத்தி சொல்லிக்கொடுக்க நிறைய புத்தகங்கள் இருக்கு.—2 தீமோத்தேயு 3:16-ஐ படிங்க. (w14-E 12/01)