பகுதி 3
கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம்
‘“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தார்.’—மத்தேயு 4:17
இந்தப் பகுதியில்
அதிகாரம் 20
கானாவில் இரண்டாவது அற்புதம்
கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு பையனை இயேசு குணமாக்குகிறார்.
அதிகாரம் 21
நாசரேத் ஜெபக்கூடத்தில் இயேசு
இயேசு சொன்ன எந்த விஷயத்தைக் கேட்டு அவருடைய ஊர்க்காரர்கள் கோபப்படுகிறார்கள்?
அதிகாரம் 22
நான்கு சீஷர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆகிறார்கள்
மீன்பிடிப்பதை விட்டுவிட்டு மனிதர்களைப் பிடிக்க வரும்படி அவர்களைக் கூப்பிடுகிறார்.
அதிகாரம் 23
கப்பர்நகூமில் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்கிறார்
இயேசு பேய்களைத் துரத்துகிறார். அவர் கடவுளுடைய மகன் என்று அந்தப் பேய்கள் சொல்கின்றன. இயேசு அவற்றை ஏன் தடுக்கிறார்?
அதிகாரம் 24
கலிலேயாவில் பெரியளவில் செய்த ஊழியம்
குணமாவதற்காக இயேசுவிடம் மக்கள் வருகிறார்கள். ஆனால், குணமாக்குவதைவிட முக்கியமான ஒரு வேலையைச் செய்வதற்காகவே தான் வந்ததாக இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 25
தொழுநோயாளியைக் கரிசனையோடு குணமாக்குகிறார்
தான் குணப்படுத்தியவர்கள்மேல் தனக்கு இருந்த அக்கறையை இயேசு எளிமையாக, அதேசமயத்தில் வலிமையான விதத்தில் காட்டுகிறார்.
அதிகாரம் 26
“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
பாவத்துக்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம் இருப்பதாக இயேசு சொல்கிறார்?
அதிகாரம் 28
இயேசுவின் சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?
திராட்சமது ஊற்றி வைக்கிற தோல் பைகளைப் பற்றிய உதாரணத்தின் மூலம் இயேசு பதில் சொல்கிறார்.
அதிகாரம் 29
ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?
38 வருஷங்களாக நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரை குணமாக்கியதற்காக யூதர்கள் ஏன் இயேசுவைத் துன்புறுத்துகிறார்கள்?
அதிகாரம் 30
கடவுளின் மகன்தான் இயேசு
இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொள்வதாக யூதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடவுள் தன்னைவிடப் பெரியவர் என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார்.
அதிகாரம் 31
ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கலாமா?
இயேசு ஏன் தன்னை ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ என்று சொல்கிறார்?
அதிகாரம் 32
ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி?
எதிரும் புதிருமான சதுசேயர்களும் பரிசேயர்களும் ஒரு விஷயத்தில் மட்டும் கூட்டுச் சேர்கிறார்கள்.
அதிகாரம் 33
ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்
தன்னைப் பற்றியும் தான் செய்ததைப் பற்றியும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று தான் குணமாக்கியவர்களிடம் இயேசு ஏன் சொல்கிறார்?
அதிகாரம் 34
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்
அப்போஸ்தலருக்கும் சீஷருக்கும் என்ன வித்தியாசம்?
அதிகாரம் 35
புகழ்பெற்ற மலைப்பிரசங்கம்
இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் இருக்கிற முக்கிய விஷயங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாரம் 36
படை அதிகாரியின் விசுவாசம்
இந்த அதிகாரி செய்த எந்த விஷயத்தைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார்?
அதிகாரம் 37
விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார்
இந்த அற்புதத்தைப் பார்க்கிறவர்கள் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள்.
அதிகாரம் 38
இயேசுவைப் பற்றி யோவான் விசாரிக்கிறார்
இயேசுதான் மேசியாவா என்று யோவான் ஸ்நானகர் ஏன் கேட்கிறார்? அவருக்குச் சந்தேகமா?
அதிகாரம் 39
திருந்தாத தலைமுறைக்குக் கேடு
கப்பர்நகூம் நகரம்தான் இயேசுவுடைய ஊழியத்தின் மைய இடமாக இருக்கிறது. நியாயத்தீர்ப்பு நாளில், சோதோம் நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனையைவிட கப்பர்நகூமுக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 40
மன்னிப்பைப் பற்றிய ஒரு பாடம்
‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று இயேசு ஒரு பெண்ணிடம் சொல்கிறார். அவள் ஒரு விபச்சாரியாக இருந்திருக்கலாம். அப்படியானால், கடவுளுடைய சட்டத்தை மீறினால் தப்பில்லை என்று இயேசு சொல்கிறாரா?
அதிகாரம் 41
அற்புதங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?
இயேசுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக அவருடைய சகோதரர்கள் நினைக்கிறார்கள்.
அதிகாரம் 43
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள்
பரலோக அரசாங்கத்தைப் பற்றி விளக்குவதற்காக இயேசு எட்டு உவமைகளைச் சொல்கிறார்.
அதிகாரம் 44
புயல்காற்றை இயேசு அடக்குகிறார்
காற்றையும் கடலையும் இயேசு அமைதிப்படுத்துகிறார். அவருடைய ஆட்சியில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
அதிகாரம் 46
இயேசுவின் உடையைத் தொட்டதால் குணமாகிறாள்
மனதைத் தொடும் இந்தச் சம்பவம், இயேசுவின் வல்லமையையும் கரிசனையையும் காட்டுகிறது.
அதிகாரம் 47
ஒரு சிறுமி உயிரோடு எழுப்பப்படுகிறாள்
இறந்துபோன சிறுமி தூங்கிக்கொண்டிருப்பதாக இயேசு சொன்னதைக் கேட்டு எல்லாரும் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயம் இயேசுவுக்குத் தெரியும்?
அதிகாரம் 48
நாசரேத் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
நாசரேத் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்டும், அற்புதங்களைப் பார்த்தும்கூட அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதிகாரம் 49
அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்
‘அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்றால் என்ன அர்த்தம்?
அதிகாரம் 50
துன்புறுத்தல் மத்தியிலும் பிரசங்கிக்கத் தயார்படுத்துகிறார்
சாவை நினைத்து பயப்பட வேண்டாம் என்று இயேசு சொல்கிறார். பிறகு ஏன், துன்புறுத்தல் வரும்போது வேறு இடத்துக்கு ஓடும்படி சொல்கிறார்?
அதிகாரம் 51
பிறந்தநாள் விருந்தில் ஒரு கொலை
சலோமேயின் நடனத்தைப் பார்த்து ஏரோது அசந்துபோகிறான். அவள் என்ன கேட்டாலும் தருவதாகச் சொல்கிறான். அவளுடைய கொடூரமான வேண்டுகோள் என்ன?
அதிகாரம் 52
ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்
இது ஒரு முக்கியமான அற்புதமாக இருப்பதால் நான்கு சுவிசேஷங்களும் இதைக் குறிப்பிடுகின்றன.
அதிகாரம் 53
இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துகிற ஒரு ராஜா
இயேசு தண்ணீர்மேல் நடந்து, புயல்காற்றை அடக்கியதைப் பார்த்த அப்போஸ்தலர்கள் என்ன பாடம் கற்றுக்கொள்கிறார்கள்?
அதிகாரம் 54
இயேசு—“வாழ்வு தரும் உணவு”
ரொம்ப முயற்சி எடுத்து, தன்னைத் தேடிவந்த மக்களை இயேசு ஏன் கண்டிக்கிறார்?
அதிகாரம் 55
இயேசுவின் போதனையால் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள்
இயேசுவின் போதனையைக் கேட்டு அவருடைய சீஷர்கள் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள், அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிடுகிறார்கள்.
அதிகாரம் 57
ஒரு சிறுமியையும் காது கேட்காதவனையும் குணமாக்குகிறார்
தன்னுடைய தேசத்தாரை நாய்க்குட்டிகள் என்று இயேசு சொன்னதைக் கேட்டு ஒரு பெண் ஏன் கோபப்படவில்லை?
அதிகாரம் 58
அற்புதமாக உணவளிக்கிறார், புளித்த மாவைப் பற்றி எச்சரிக்கிறார்
இயேசு எந்தப் புளித்த மாவைப் பற்றிப் பேசுகிறார் என்பதைக் கடைசியில் சீஷர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
அதிகாரம் 59
மனிதகுமாரன் யார்?
அரசாங்கத்தின் சாவிகள் என்னென்ன? அவற்றை யார் பயன்படுத்துவார்? எப்படிப் பயன்படுத்துவார்?
அதிகாரம் 60
கிறிஸ்து மகிமையோடு தோன்றுகிறார்
இயேசு எப்படித் தோற்றம் மாறுகிறார்? அது எதற்கு அடையாளமாக இருக்கிறது?
அதிகாரம் 61
பேய் பிடித்த பையனைக் குணமாக்குகிறார்
விசுவாசக் குறைவினால்தான் அந்தப் பையன் குணமாகவில்லை. யாருடைய விசுவாசம் குறைவாக இருக்கிறது? பையனுடையதா, அவன் அப்பாவுடையதா, சீஷர்களுடையதா?
அதிகாரம் 62
மனத்தாழ்மை பற்றிய ஒரு முக்கியமான பாடம்
சின்னப் பிள்ளையிடமிருந்து பெரியவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
அதிகாரம் 63
கூடுதல் ஆலோசனைகளை இயேசு கொடுக்கிறார்
சகோதரர்களுக்கு இடையில் பெரிய பிரச்சினைகள் வரும்போது எடுக்க வேண்டிய மூன்று படிகளை இயேசு விளக்குகிறார்.
அதிகாரம் 64
ஏன் மன்னிக்க வேண்டும்?
இரக்கமில்லாமல் நடந்துகொண்ட அடிமையைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொல்கிறார். மற்றவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் அதை எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்பதையும் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
அதிகாரம் 65
எருசலேமுக்குப் போகும் வழியில் கற்பிக்கிறார்
மூன்று பேரிடம் இயேசு பேசுகிறார். எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தால் ஒருவர் தன்னைப் பின்பற்றி வர முடியாது என்று சொல்கிறார்.