மகா பரிசுத்த அறை
வழிபாட்டுக் கூடாரம் மற்றும் ஆலயத்தின் உள்ளறை. இங்குதான் ஒப்பந்தப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ என்றும் அழைக்கப்பட்டது. மோசேயைத் தவிர தலைமைக் குருவுக்கு மட்டும்தான் இதற்குள் போக அனுமதி இருந்தது. அதுவும், பாவப் பரிகார நாளில் மட்டும்தான் உள்ளே போக அனுமதி இருந்தது.—யாத் 26:33; லேவி 16:2, 17; 1ரா 6:16; எபி 9:3.