Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கவலை

கவலை

பணமோ சாப்பாடோ வீடோ இல்லாததை நினைத்து உங்களுக்குக் கவலையாக இருக்கிறதா?

நீதி 10:15; 19:7; 30:8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • புல 3:19—எருசலேமின் அழிவுக்குப் பிறகு, பெரும்பாலான யூதர்களைப் போல எரேமியா தீர்க்கதரிசியும் வீடுவாசல் இல்லாமல் இருந்தார்

    • 2கொ 8:1, 2; 11:27—மக்கெதோனியாவில் இருந்த கிறிஸ்தவர்கள் கொடிய வறுமையினால் கஷ்டப்பட்டார்கள்; அப்போஸ்தலன் பவுல் நிறைய சமயங்களில் சாப்பாடோ, துணிமணியோ, தங்க இடமோ இல்லாமல் கஷ்டப்பட்டார்

  • ஆறுதலான வசனங்கள்:

உங்களுக்கு நண்பர்களே இல்லாமல் போய்விடுவார்களோ, தன்னந்தனியாக ஆகிவிடுவீர்களோ, அல்லது அன்பு கிடைக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் பயப்படுகிறீர்களா?

யோபு 19:19; பிர 4:10, 12

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 18:22; 19:9, 10—யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களில் தான் மட்டும்தான் இருப்பதாக எலியா தீர்க்கதரிசி நினைத்தார்

    • எரே 15:16-21—எரேமியா தீர்க்கதரிசியைச் சுற்றியிருந்த மக்கள் கூத்தும் கும்மாளமும் அடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்; அவர் சொல்லவந்த செய்தியைக் காதில் வாங்கவே இல்லை; அதனால் அவர் தன்னந்தனியாக இருப்பதுபோல் உணர்ந்தார்

  • ஆறுதலான வசனங்கள்:

  • ஆறுதலான பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 19:1-19—எலியாவுக்கு யெகோவா உணவும் தண்ணீரும் கொடுத்தார்; எலியா சொன்னதைப் பொறுமையோடு கேட்டார்; உதவி செய்ய தனக்கு மகா வல்லமை இருப்பதை எலியாவின் கண்முன் காட்டினார்

    • யோவா 16:32, 33—நண்பர்கள் தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்றாலும், யெகோவா எப்போதும் தன்னோடு இருப்பார் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதனால், அவர் கவலைப்படவில்லை