மனஸ்தாபங்களைத் தீர்ப்பது
யாராவது நம் மனதைப் புண்படுத்திவிட்டால் நாம் ஏன் கோபப்படவோ பழிவாங்கவோ கூடாது?
நீதி 20:22; 24:29; ரோ 12:17, 18; யாக் 1:19, 20; 1பே 3:8, 9
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 25:9-13, 23-35—தாவீதையும் அவருடைய ஆட்களையும் மதிக்காமல் நாபால் திமிராகப் பேசினான், அவர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டான்; நாபாலையும் அவனுடைய ஆட்களையும் தீர்த்துக்கட்டுவதற்காகக் கண்மண் தெரியாத கோபத்தில் தாவீது கிளம்பினார்; ஆனால், அபிகாயில் தந்த ஞானமான ஆலோசனையால் கொலைப்பழிக்கு ஆளாகாமல் தப்பித்தார்
-
நீதி 24:17-20—எதிரியின் கஷ்டத்தைப் பார்த்து நாம் சந்தோஷப்பட்டால் யெகோவா நம்மேல் வருத்தப்படுவார் என்று அவருடைய சக்தியின் தூண்டுதலால் சாலொமோன் எச்சரித்தார்; கெட்டவர்களை யெகோவா நியாயந்தீர்ப்பார் என்று நாம் நம்புகிறோம்
-
இன்னொருவரோடு நமக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால், அவரிடம் பேசுவதை நிறுத்திவிடுவதோ அவர்மேல் வெறுப்பை வளர்த்துக்கொள்வதோ சரியா?
லேவி 19:17, 18; 1கொ 13:4, 5; எபே 4:26
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 5:23, 24—ஒரு சகோதரருக்கு நம்மேல் மனஸ்தாபம் இருந்தால் அவரோடு சமாதானமாவதற்கு நாம் எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்
-
யாராவது நம் மனதைப் புண்படுத்திவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
யாராவது நமக்கு எதிராகத் திரும்பத் திரும்பப் பாவம் செய்திருந்தாலும், அவர்கள் உண்மையிலேயே மனம் திருந்தினால் நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?
நம்மால் மன்னிக்க முடியாதளவுக்குப் பெரிய பாவத்தை நமக்கு எதிராக ஒருவர் செய்துவிட்டால், உதாரணத்துக்கு அவதூறு சொல்லிவிட்டால் அல்லது மோசடி செய்துவிட்டால், அவரிடம் யார் பேச வேண்டும், என்ன குறிக்கோளோடு?
நமக்கு எதிராக அவதூறு சொன்ன அல்லது மோசடி செய்த ஒருவரிடம் நாம் தனியாகப் போய்ப் பேசிய பிறகும் அவர் மனம் திருந்தாவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?