கடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்
கடவுள் நமக்குச் சொல்ல விரும்பும் செய்தி பைபிளில் இருக்கிறது. வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறலாம், கடவுளுக்குப் பிரியமாக எப்படி வாழலாம் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும் பதில் தருகிறது:
1. கடவுள் யார்?
பைபிள் வசனங்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
பைபிளில் 66 சிறு புத்தகங்கள் இருக்கின்றன. எபிரெய-அரமேயிக் வேதாகமம் (“பழைய ஏற்பாடு”) என்றும், கிரேக்க வேதாகமம் (“புதிய ஏற்பாடு”) என்றும் இரண்டு பகுதிகளாக பைபிள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பைபிள் புத்தகத்திலுமே அதிகாரங்களும் வசனங்களும் இருக்கின்றன. வசனங்கள் குறிப்பிடப்படும்போது, புத்தகத்தின் பெயருக்கு அடுத்து வருகிற எண் அதிகாரத்தைக் குறிக்கிறது, அதற்கு அடுத்து வருகிற எண் வசனத்தைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, ஆதியாகமம் 1:1 என்பது ஆதியாகமம் புத்தகத்தில் அதிகாரம் 1, வசனம் 1-ஐக் குறிக்கிறது.