யோவானின் முதலாம் கடிதம் 5:1-21

5  இயேசுதான் கிறிஸ்து என்று நம்புகிற ஒவ்வொருவனும் கடவுளுடைய பிள்ளையாக இருக்கிறான்.+ தகப்பனாகிய கடவுள்மீது அன்பு காட்டுகிற ஒவ்வொருவனும் அவருடைய பிள்ளைமீதும் அன்பு காட்டுகிறான்.  நாம் கடவுள்மீது அன்பு காட்டி அவருடைய கட்டளைகளின்படி நடக்கும்போது, அவருடைய பிள்ளைகள்மீது+ அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியும்.  நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+  ஏனென்றால், கடவுளுடைய பிள்ளைகள் எல்லாரும் இந்த உலகத்தை ஜெயிக்கிறார்கள்.*+ நம்முடைய விசுவாசம்தான் இந்த உலகத்தை ஜெயித்திருக்கிற ஜெயம்.+  இந்த உலகத்தை யாரால் ஜெயிக்க முடியும்?+ இயேசுதான் கடவுளுடைய மகன் என்று விசுவாசிக்கிறவனால்தான் முடியும், இல்லையா?+  இயேசு கிறிஸ்துவாகிய இவர்தான் தண்ணீராலும் இரத்தத்தாலும் வந்தவர். இவர் தண்ணீரோடு மட்டுமல்ல,+ தண்ணீரோடும் இரத்தத்தோடும் வந்தவர்.+ கடவுளுடைய சக்திதான் இதற்குச் சாட்சி,+ ஏனென்றால் அந்தச் சக்திதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.  சாட்சி கொடுப்பவை மூன்று:  கடவுளுடைய சக்தி,+ தண்ணீர்,+ இரத்தம்.+ இந்த மூன்றும் ஒரே விஷயத்தைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.  மனிதர்கள் கொடுக்கிற சாட்சியை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், கடவுள் கொடுக்கிற சாட்சி அதைவிட உயர்ந்தது. ஏனென்றால், அது கடவுளே தன்னுடைய மகனைப் பற்றிக் கொடுத்திருக்கிற சாட்சி. 10  கடவுளுடைய மகன்மேல் விசுவாசம் வைக்கிறவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தச் சாட்சியை மனதார ஏற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறான். கடவுளை விசுவாசிக்காதவனோ அவரைப் பொய்யராக்கியிருக்கிறான்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மகனைப் பற்றிக் கொடுத்த சாட்சியில் அவன் விசுவாசம் வைப்பதில்லை. 11  கடவுள் நமக்கு முடிவில்லாத வாழ்வைக்+ கொடுத்தார் என்பதுதான் அந்தச் சாட்சி. அந்த வாழ்வு அவருடைய மகன் மூலம் வருகிறது.+ 12  மகனை ஏற்றுக்கொள்கிறவனுக்கு அந்த வாழ்வு கிடைக்கிறது. கடவுளுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவனுக்கோ அந்த வாழ்வு கிடைப்பதில்லை.+ 13  கடவுளுடைய மகனின் பெயரில் விசுவாசம் வைக்கிற+ உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.+ இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எழுதுகிறேன். 14  கடவுளுடைய விருப்பத்துக்கு* ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்+ என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.*+ 15  அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதை அறிந்திருப்பதால், அவரிடம் கேட்டுக்கொண்ட காரியங்கள் நமக்குக் கிடைக்கும் என்பதையும் அறிந்திருக்கிறோம்.+ 16  மரணத்துக்கு வழிநடத்தாத ஒரு பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவர் பார்த்துவிட்டால், அவர் அவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வார். கடவுள் அவனுக்கு வாழ்வு கொடுப்பார்.*+ ஆம், மரணத்துக்கு வழிநடத்தாத பாவத்தைச்+ செய்தவர்களுக்குத்தான் அது பொருந்தும். மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம் இருக்கிறது. அப்படிப்பட்ட பாவத்தைச் செய்கிறவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி நான் அவரிடம் சொல்லவில்லை. 17  அநீதியான எல்லா செயலும் பாவம்தான்.+ ஆனால், மரணத்துக்கு வழிநடத்தாத பாவமும் இருக்கிறது. 18  கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற ஒவ்வொருவனும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை என்று நமக்குத் தெரியும்; ஆனால், கடவுளுடைய பிள்ளையாக இருப்பவர்* அவனைப் பாதுகாக்கிறார்; பொல்லாதவனால் அவனை எதுவும் செய்ய முடியாது.+ 19  நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும், ஆனால் இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.+ 20  கடவுளுடைய மகன் வந்திருக்கிறார்+ என்றும், உண்மையானவரைப் பற்றிய அறிவை நாம் அடையும்படி ஆழமான புரிந்துகொள்ளுதலை* தந்திருக்கிறார் என்றும் நமக்குத் தெரியும். உண்மையானவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்து மூலம் நாம் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறோம்.+ அவர்தான் உண்மையான கடவுளாகவும் முடிவில்லாத வாழ்வாகவும் இருக்கிறார்.+ 21  சின்னப் பிள்ளைகளே, சிலைகளுக்கு விலகி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கடவுளிடமிருந்து வருகிற எல்லாமே இந்த உலகத்தை ஜெயிக்கும்.”
வே.வா. “சித்தத்துக்கு.”
வே.வா., “காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதால் நாம் அவரிடம் தயக்கமில்லாமல் பேச முடியும்.”
வே.வா., “அவனை மன்னிப்பார்.”
அதாவது, “கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து.”
நே.மொ., “புத்திக்கூர்மையை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா