ஜூன் 17-23
சங்கீதம் 51-53
பாட்டு 89; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. பெரிதாக ஏதாவது பாவம் செய்யாமல் இருக்க ஜாக்கிரதையாக இருங்கள்
(10 நிமி.)
அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருக்காதீர்கள்—எல்லா மனிதர்களுமே தவறு செய்கிறவர்கள்தான் (சங் 51:5; 2கொ 11:3)
யெகோவாவோடு நெருக்கமாக இருக்க உதவும் விஷயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள் (சங் 51:6; w19.01 பக். 15 பாரா. 4-5)
கெட்ட எண்ணங்களையும் ஆசைகளையும் எதிர்த்து சண்டை போடுங்கள் (சங் 51:10-12; w15 6/15 பக். 14 பாரா. 5-6)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
சங் 52:2-4—தோவேக் செய்த விஷயத்தைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (it-1-E பக். 644)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 51:1-19 (th படிப்பு 12)
4. பேச்சை ஆரம்பிப்பது
(2 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 7 குறிப்பு 3)
5. பேச்சை ஆரம்பிப்பது
(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 4 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கடவுளுடைய பெயரை அந்த நபருக்கு சொல்லிக்கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
7. சீஷர்களை உருவாக்குவது
பாட்டு 115
8. உங்கள் தவறுகளைச் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நாம் எல்லாருமே தவறு செய்துவிடுகிறோம். (1யோ 1:8) தவறு செய்துவிட்டால் நாம் அவமானத்திலோ பயத்திலோ அப்படியே இருந்துவிட கூடாது. மன்னிப்புக்காகவும் உதவிக்காகவும் யெகோவாவிடம் ஓடிப்போக வேண்டும். (1யோ 1:9) தவறைச் சரிசெய்வதற்கான முதல்படியே யெகோவாவிடம் ஜெபம் செய்வதுதான்.
சங்கீதம் 51:1, 2, 17-ஐ வாசியுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:
-
நாம் மோசமான ஒரு பாவத்தைச் செய்துவிட்டால் யெகோவாவிடம் உதவி கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை தாவீதின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?
டீனேஜில் நான்—என் தவறுகளை சரிசெய்வது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
-
தலீலா மற்றும் ஷோஸ் தவறு செய்வதற்கு எதெல்லாம் காரணமாக இருந்தது?
-
அவர்களுடைய தவறைச் சரிசெய்ய அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்?
-
அப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன?
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 11 பாரா. 5-10, பக். 89-ன் பெட்டி